
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர் தாக்குதலை நடத்தியது.
இந்த ஏவுகணை தாக்குதல் மூலம் தீவிரவாதிகளின் இடங்கள் மட்டுமே அழிக்கப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என்று கூறி இருந்த நிலையில் தற்போது ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தொடர்ந்து நிலவி வரும் போர் பதற்ற சூழ்நிலையைத் தொடர்ந்து, பிரபல நடிகை சிம்ரன் தன் கவலையை வெளிப்படுத்தியுள்ளார். “இந்தியா-பாகிஸ்தான் இடையே நடக்கும் போர் பதற்றம் நல்லபடியாக முடிவடைய வேண்டும். இதில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதைவிட, மனித நேயம் தான் ஜெயிக்கணும்” என உணர்வுபூர்வமாக அவர் கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நிலவ வேண்டும் என்பதே தன் ஆசை என்றும், பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே பிரார்த்தனை செய்வதாக சிம்ரன் கூறியுள்ளார்.