உத்தர் பிரதேஷ் மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் பிரசாத். இவரது மகன் தீபக். சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த கணேஷ் பிரசாத் டிவியில் இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த தீபக் இரவு உணவு தயார் செய்து தருமாறு கேட்டுள்ளார். ஆனாலும் கணேஷ் தொடர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தீபக் டிவியை ஆஃப் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த கணேஷ் பிரசாத் தீபக்கிடம் தகராறு செய்துள்ளார் இதில் ஒரு கட்டத்தில் மொபைல் சார்ஜிங் கேபிள் வயரை வைத்து மகன் என்றும் பாராமல் தீபக்கின் கழுத்தை நெருக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். தீபக்கின் சடலம் படிக்கட்டில் கிடப்பதை பார்த்த உறவினர்கள் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் தப்பி சென்ற கணேஷ் பிரசாத்தை கைது செய்தனர்.