
இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையில் எல்லை பிரச்சினை நீண்ட காலமாக நீடித்து வருகின்றது. இதற்கிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு லடாக்கில் இரு நாட்டு ராணுவமும் மோதிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பதற்றத்தை தணிக்க இரு நாடுகளுக்கிடையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய பாதுகாப்பு ஆலோசராக அஜித் தோவல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு சீன மந்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சீன மந்திரி தோவலுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில், “சீனாவும், இந்தியாவும் உலக அளவில் பெரும் மக்கள் தொகை கொண்ட நாடாகவும், வளர்ந்து வரும் பொருளாதாரங்களாகவும், இரு தரப்பு எல்லைகளைத் தாண்டி உறவை பகிர்ந்து கொள்கின்றன. இந்த எல்லை விவகாரத்தில் இருநாட்டு தலைவர்களுக்கும் ஒருமித்த கருத்தை நடைமுறைப்படுத்தவும், பிரச்சனைகளை கையாளவும், அமைதி மற்றும் நிலைத்தன்மையை பாதுகாக்கவும் அஜித் தோவலுடன் இணைந்து செயல்பட இருக்கிறேன்” என்றார்.