
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கிலில் கடந்த 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்தது. இந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்றது. கார்கிலில் கடும் பனி நிலவியபோதும் இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டி அடித்தனர். இதில் பல உயிர் சேதம் ஏற்பட்டது. கார்கிலில் ஒவ்வொரு ஆண்டும் போர் வெற்றி தினம் கொண்டாடப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டு 25-வது அதாவது சில்வர் ஜூப்ளி வெற்றி போர் தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவர் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். பின் அவர் கூறியதாவது, நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டு இருக்கிறோம். பாகிஸ்தான் இன்றும் இந்தியா மீது ராணுவ தாக்குதல் செய்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் தீய நோக்கத்துடன் இந்தியாவை அணுகினால் அடக்கி ஒடுக்கப்படுவார். மேலும் நமது ராணுவ வீரர்கள் முழு பலத்துடன் போரிடுவார்கள் என்று கூறினார்.