இன்றைய காலகட்டத்தில் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் மன நிம்மதியுடன் சுமுகமாக வாழ்க்கையை வாழ்வதற்கு மக்கள் பணம் சம்பாதிக்க வழிகளை தேடுகின்றனர். ஆனால் சில நேரங்களில் மன உளைச்சல் அதிகமாகி இக்கட்டான சூழலில் பலரும் சிக்கி தவிக்கின்றனர். இது போன்ற சூழலில் இருந்து வெளிவர கட்டிப்பிடி வைத்தியம் தற்போது பிரபலமாகிவிட்டது.

இந்தியாவில் டெல்லி போன்ற நகரங்களில் cuddle therapy என்று சொல்லப்படும் கட்டிப்பிடி வைத்தியம் பிரபலமாகி வருகின்றது. 20 முதல் 25 வயது கொண்ட இளம் பெண்கள் இந்த முயற்சியை முன்னெடுக்கின்றனர். வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களை மனம் விட்டு பேசுவதற்கும் கட்டிப்பிடித்து மன ஆறுதல் அடையவும் இந்த தெரபிஸ்டுகள் உதவுகிறார்கள். இதற்காக ஒரு மணி நேரத்திற்கு இவர்கள் சுமார் 20000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.