இந்தியாவைப் பொறுத்த வரையில் அழகான இடங்கள் நிறைய உள்ளன. அதனைப் போலவே பயணம் செய்யும்போது தங்குவதற்கான அழகான ஹோட்டல்கள் மற்றும் சொகுசு விடுதிகளும் இங்கு அதிகம் உள்ளது. இந்தியாவிலேயே மிகவும் விலை உயர்ந்த ஹோட்டல் ஜெய்ப்பூர் மாநிலத்தில் உள்ளது. ராஜ் பேலஸ் என்பதுதான் இப்போது அதன் பெயர். இந்தியாவில் உள்ள மிகவும் விலை உயர்ந்த ஹோட்டல்களின் பட்டியலில் ஒன்றாக இது உள்ளது.

300 ஆண்டுகள் பழமையான இந்த ஹோட்டல் ஒரு காலத்தில் அரண்மனையாக இருந்த இடத்தை 1996 ஆம் ஆண்டு இளவரசி ஜெயந்திர குமாரி என்பவர் ஹோட்டல் ஆக மாற்றினார். இந்த ஹோட்டலில் உள்ள சூட் ரூமின் வாடகை 5 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்கி 14 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த ஹோட்டலில் உள்ள அனைத்து அறைகளிலும் தங்க மரச்சாமான்கள் உள்ளது. இங்கு அனைத்து அறைகளும் ராயல் தோற்றத்தில் இருக்கும். இந்த ஹோட்டலில் பாரம்பரிய மற்றும் முதன்மையான அறைகளுக்கு ஒரு இரவு வாடகை சுமார் 60 ஆயிரம் ரூபாயிலிருந்து தொடங்குகின்றது.