
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தலைமை கூட்டுறவு வங்கி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் IMPS வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில் புதிய பண பரிவர்த்தனை வசதியுடன் யுபிஐ வசதியும் கொண்டுவரப்படும் இதன் மூலம் இணை கூட்டுறவு வங்கிகளுக்கு கூகுள் பே, பேடிஎம், BHIM உள்ளிட்டவைகள் மூலம் பணம் அனுப்பலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.