
நாடு முழுவதும் அரிசி விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 15 சதவீதம் அளவிற்கு விலை அதிகரித்துள்ளது. இதனால் அரிசி விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்தியாவில் புதிதாக அரிசி ஏடிஎம் மிஷினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மெஷின் முதல் முறையாக ஒடிசா மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை புவனேஸ்வர் நகரில் அம்மாநில உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் திறந்து வைத்துள்ளார்.
ஏற்கனவே மத்திய அரசு சார்பில் பாரத் அரசி என்ற பெயரில் ஒரு கிலோ ரூ.29-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவை 5 கிலோ மற்றும் 10 கிலோ பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. இதைத்தொடர்ந்து தற்போது அரசு ஏடிஎம் மிஷினை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதில் ஒருவர் தங்களுடைய ஆதார் மற்றும் ரேஷன் கார்டு போன்றவற்றை பயன்படுத்தி 25 கிலோ அரிசியை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் அரிசி திருட்டை தடுக்க முடியும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டம் விரைவில் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.