
இந்தியாவில் பிரபல பத்திரிகை நிறுவனமாக செயல்பட்டு வரும் இந்தியா டுடே தற்போது இந்தியாவின் அதிகாரமிக்க தலைவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மொத்தம் 20 தலைவர்கள் இடம் பெற்றுள்ள நிலையில் தமிழகம் முதல்வர் ஸ்டாலினும் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அதன்படி இந்த பட்டியலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 8-ம் இடத்தை பிடித்துள்ளார். அதன்பிறகு இந்த பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்திலும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இரண்டாம் இடத்திலும், அமித்ஷா மூன்றாம் இடத்திலும் இருக்கிறார்கள்.
அதன்பிறகு இந்த பட்டியலில் ராகுல் காந்தி நான்காம் இடத்திலும், சந்திரபாபு நாயுடு ஐந்தாம் இடத்திலும், நிதீஷ் குமார் ஆறாம் இடத்திலும், யோகி ஆதித்யநாத் ஏழாம் இடத்திலும் இருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் எட்டாம் இடத்திலும், மேற்குவங்க மாநிலம் முதல்வர் மம்தா பானர்ஜி ஒன்பதாம் இடத்திலும், உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பத்தாம் இடத்திலும் இருக்கிறார்கள். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தியாவின் அதிகார வலிமைமிக்க அதாவது அதிகார சபை தலைவர்கள் பட்டியலில் இடம் பிடித்ததை திமுக கொண்டாடி வருகிறது.