இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் அமைந்துள்ள ஹீத்ரோ விமான நிலையம் உலகளாவிய ரீதியில் மிகவும் பிரபலமான விமான நிலையமாகும். இந்நிலையில், சமீபத்தில் இங்கு வந்திறங்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த லூசி ஒயிட் என்ற பெண்மணி, அங்கு பணியாற்றும் இந்திய மற்றும் ஆசிய வம்சாவளியினர் மீது இனவெறி கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.

எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஹீத்ரோ விமான நிலையத்தில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்கள் இந்தியர்கள் அல்லது ஆசிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கவனித்தேன். அவர்களை ஆங்கிலத்தில் பேசச் சொன்னேன். ஆனால் அவர்கள் பேச மறுத்தனர்.

“>

 

 

அதற்கு பதிலாக என்னை இனவெறி பிடித்தவள் என குற்றம் சாட்டினார்கள். இவர்கள் ஏன் இங்கிலாந்துக்குள் நுழையும் முதல் இடத்தில் வேலை செய்கிறார்கள்? இவர்கள் அனைவரையும் நாடு கடத்த வேண்டும்” என கொந்தளித்து பதிவிட்டுள்ளார்.

இங்கிலாந்து பெண்ணின் இந்தப் பதிவுக்கு பல்வேறு சமூக வலைதள பயனர்கள் தெளிவான கண்டனங்களையும், எதிர்வினைகளையும் பதிவு செய்து வருகின்றனர். “மிகவும் அருவருப்பான மற்றும் பின்னடைவு கொண்ட மனப்பாங்கு” என ஒருவர் கூற, “இந்தியர்கள் இல்லாமல் ஹீத்ரோ ஓடவே முடியாது. அவர்கள் எல்லோரும் நாட்டின் முதன்மை தூண்கள்” எனக் குறிப்பிடுகின்றனர்.

தற்போது இந்த இனவெறி கருத்து தொடர்பாக உலகளாவிய கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், லூசி ஒயிட் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது கவனிக்கப்பட வேண்டிய விசயமாக உள்ளது .