தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்றுவரை முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமல்ஹாசன். இன்றும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார். இவருடைய நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் இன்றும் மறவாத இடம் பிடித்துள்ள நிலையில் இதனை தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியான நிலையில் இந்த திரைப்படம் முதல் நாளில் 50 கோடி ரூபாய் வரை மட்டுமே வசூலித்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் தமிழகத்தில் மட்டும் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 20 கோடி என சொல்லப்படுகிறது. இந்தியன் 2 முதல் நாளில் 50 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது படக்குழுவினருக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்திய 2 திரைப்படம் முதல் மூன்று நாட்களில் 200 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.