தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று புதிய அமைச்சர்கள் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த விழாவில் திமுக கட்சியின் அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆனால் 2 முக்கிய அமைச்சர்கள் மட்டும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. அதன்படி அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

அதாவது அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயாருக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் அவரால் பதவி ஏற்ப விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது தன் தாயாரை சந்திக்க மதுரைக்குச் சென்றார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை வர தாமதமானதால் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள வில்லையாம். அதன் பிறகு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் லண்டன் சென்றுள்ளதால் அவராலும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகவும்.