இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி தம்பதிக்கு ராகுல் காந்தி பிரியங்கா காந்தி என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

ராஜீவ் காந்தி கடந்த 1991 ஆம் வருடம் மே மாதம் 21ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அப்போது ராகுல் காந்திக்கு வயது 21 தான். அவரின் இளைய சகோதரி பிரியங்கா காந்தியின் வயது 19.