பெண்களுக்கு தவிர்க்க முடியாத பிரச்சினைகளில் ஒன்று மாதவிடாய். இந்தியாவில் கூட ஒடிசா உட்பட சில மாநிலங்களில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின் போது சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் தனக்கு மாதவிடாய் என்பதால் ஒருநாள் விடுமுறை எடுத்துள்ளார்.

இதனால் அந்த தனியார் நிறுவனம் அந்த பெண்ணை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. இது தொடர்பாக அந்த பெண் ரெடிக்ட் வலைதளத்தில் வேதனையுடன் பகிர்ந்துயுள்ளார். இதனால் தனக்கு கிடைக்க வேண்டிய அனுபவ சான்றிதழ் மற்றும் இதர சலுகைகள் மறுக்கப்பட்டதாக அந்த பெண் வேதனை தெரிவித்துள்ளார். மேலும் வேறு வேலை கிடைத்தாலும் ஊதியம் உயராததால் அந்த பெண் ஆதங்கத்துடன் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.