சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகள் குறித்த வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. சமூக ஊடகங்களில் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பொதுவாகவே பாம்புகள் என்றால் அனைவருக்கும் பயம் தான். தற்போது மனிதர்கள் இருக்கும் இடங்களை தேடி பாம்புகள் அடிக்கடி வீட்டில் பல இடங்களில் இருப்பதை வீடியோக்களாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் இரண்டு மனிதர்கள் பாம்பின் அருகே நிற்கின்றனர். ஆனால் அந்த இருவரும் பாம்பு என்று அச்சம் இல்லாமல் தைரியமாக நின்று கொண்டிருக்கும் நிலையில் ஒரு பெண் சுற்றுலா பயணியான அவர் கம்பீரமான உயிரினமான பாம்பால் வசீகரிக்கப்பட்டு அந்த இருவரை அணுகுகின்றார். அந்தப் பெண் அருகில் சென்ற நிலையில் பாம்பின் செதில்கள் நிறைந்த பின் தலையில் ஒரு முத்தத்தை இடுவதற்கு முயற்சி செய்கின்றார். இருந்தாலும் பாம்பு அவரின் முகத்தை கடித்ததால் அந்தப் பெண்ணின் வசீகரம் சில நொடிகளில் பயங்கரமாக மாறுகின்றது. இதன் விளைவால் அந்த பெண்ணின் முகத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் அதிர்ச்சி அளிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

meme kh? meme dong இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@memeloglc)