பாஜக முன்னாள் மாநில  தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, தமிḻநாடு விண்வெளி தொழில்துறை கொள்கை நேற்று வெளியிடப்பட்டது. இது எதிர்பார்க்கப்பட்டதே, ஏனெனில் முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் மருமகன் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமொன்றை துவக்கியதைத் தொடர்ந்து இது வந்துள்ளது.

திரு சபரீசன், தமிழ்நாட்டின் நிழல் முதலமைச்சராகக் கூறப்படுபவர், 22.07.2024 அன்று பதிவு செய்யப்பட்ட ‘வானம் ஸ்பேஸ் எல்.எல்.பி’ எனும் நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளார்.

இந்த நிறுவனத்திற்கு 20% மூலதன மானியம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து இந்த தொழில்துறை கொள்கையை ‘கோபாலபுரம் குடும்ப தொழில்துறை கொள்கை’ என்று அழைக்கலாமே!

மாநிலம் தற்பொழுது முதலீடுகள் பற்றாக்குறை காரணமாக வாடிக் கொண்டிருக்கிறது. 2024–25 நிதியாண்டில் புதிய முதலீடுகள் வருவது கடினமாகி இருக்கிறது. ஆனால் இங்கு ஒரு அதிகாரவாத அரசு தனது குடும்பத்திற்காக ஒரு தொழில்துறை கொள்கையை வெளியிட்டு இருக்கிறது. இது வெட்கக்கேடான ஒன்று என பதிவிட்டுள்ளார்.