பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திருப்பரங்குன்றத்தில் திட்டமிட்டு மத மோதலை உருவாக்க முயற்சிக்கிறார்கள். சிறுபான்மை மக்களை திமுக தாஜா செய்கின்ற வகையில் அங்கு மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்து முன்னணியின் போராட்டத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு ஜனநாயக விரோத செயல். சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கிக்காக திமுக இந்து மத உணர்வுகளை தொடர்ந்து அவமதித்து வருகின்றது. இப்படி இந்து மக்களின் உணர்வுகளோடு விளையாடுவதற்கு 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். காவல்துறை பெண் ஏடிஜிபி தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறியுள்ளார்.

அந்தப் பெண் அதிகாரி துயரத்தை தாங்க முடியாமல் காவல்துறை உயர் அதிகாரியிடம் புகார் அளித்து ஆறு மாதங்களாக விசாரிக்கப்படவில்லை. இது எவ்வளவு பெரிய அவமானம். தமிழகத்தில் காவல்துறை முழுவதுமாக சீர்குலைந்து விட்டது. காவல்துறையை கையில் வைத்துள்ள தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.