நடிகர் விஜய் புதிதாக தமிழக வெற்றிக்கழகம் என்று அரசியல் கட்சியினை தொடங்கியுள்ள நிலையில் இன்று முதல் மாநில மாநாட்டினை நடத்தும் நிலையில் மாநாடு தொடங்கிவிட்டது. இந்நிலையில் நடிகர் விஜயின் அரசியல் வருகையை பல ஆதரித்தாலும் பல விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக பாஜக கட்சியைச் சேர்ந்த வினோஜ்‌ பி‌ செல்வம் நடிகர் விஜயை ஆரம்பம் முதலே விமர்சித்து வருகிறார். குறிப்பாக அவரை திமுகவின் பி டீம் என்று அவர் கூறுகிறார். இந்நிலையில் நடிகர் விஜயின் முதல் வெற்றி கழக மாநாட்டுக்கு சென்றவர்களில் இன்று விபத்தில் 3 பேர்‌ வரை உயிரிழந்துள்ளனர். காலையில் பைக்கில் சென்ற இரு வாலிபர்களில் ஒருவர் விபத்தில் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பிறகு ஓடும் ரயிலில் இருந்து மூவர் குதித்த நிலையில் அவர்களும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் இன்று விக்கிரவாண்டிக்கு காரில் சென்ற போது பயங்கர விபத்தில் சிக்கினர். இதில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் இருவரும் உயிரிழந்த நிலையில் மூவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தற்போது வினோஜ் பி செல்வம் ‌ விமர்சித்துள்ளார். அவர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதோடு இது ரீல் அல்ல ரியலு என்பதை விஜயையும் அவருடைய ரசிகர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.