
சமூக ஊடகங்களில் தற்போது வெறும் 11 வினாடிகள் மட்டுமே நீளமுடைய ஒரு காணொளி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ X (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் “@PalsSkit” என்ற கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.
“கர்மாவின் பலனை உடனடியாகப் பெற்றேன்” என்ற கேப்ஷனுடன் வீடியோ பதிவாகியுள்ளது. இந்த வீடியோ பல லட்சக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
तुरन्त कर्म का फल मिला 😄 pic.twitter.com/ZMypncklDr
— Reetesh Pal (@PalsSkit) June 13, 2025
வீடியோவில் ஒரு பெண் பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஒரு பேருந்து வந்தவுடன் உள்ளே ஏறுவது போல நடித்து திடீரென அந்த வாலிபரின் முதுகில் ஏறி கொள்கிறார்.
இதனால் பேருந்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர். அதே நேரம் பெண்ணை தூக்கிக்கொண்டு ஓடிய வாலிபர் மீது நேராக ஒரு சைக்கிள் மோதியது. இதனால் அந்த பெண்ணை கீழே போட்டுவிட்டு வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கிறார்.
இந்த வீடியோவை பார்த்த பலரும் விதை விதைப்பது போல அறுவடை வரும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் கர்மா ஒரு கதை அல்ல அது உண்மை எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.