
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெரியார் ஈவேரா வைக்கம் போராட்டத்தில் பங்கேற்று 100 ஆண்டுகள் நிறைவு பெற்றது. அங்குள்ள பெரியார் நினைவகம் நூலகம் ஆகியவற்றின் திறப்பு நிகழ்வில் இரு மாநில முதல்வர்களும் பங்கேற்று திறந்து வைத்தனர்.
பின்னர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, பெரியாருக்கு எதிராக யாகம் நடத்திய ஊரில் அவருக்கு புகழ் மாலை சூட்டப்பட்டுள்ளது. இதுதான் பெரியாரின் வெற்றி. பெரியாரியத்தின் வெற்றி. திராவிட இயக்கத்தின் வெற்றி. சமூக நீதி வரலாற்றில் இந்த நாள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.