மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் சுயேச்சை சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தோல்வி அடைந்தார். இதனை தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில், என் பெயரில் பல சுயேச்சைகளை நிறுத்தி என்னை தோற்கடிக்க சிலர் முயன்ற நிலையில் என் பெயரையும் பலாப்பழம் சின்னத்தையும் கண்டறிந்து எனக்கு லட்சக்கணக்கான வாக்குகள் கொடுத்த ராமநாதபுரம் மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழ்நாட்டில் அமைக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்று தொண்டர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.