நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சிறுவன் எனக்கூறி சலூன் கடைக்காரர் முடிவெட்டிவிட மறுத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரிடம், ‘இதுல கூட ஜாதி பாக்குறீங்களேனா’ கேள்வி எழுப்பிய நபர்களிடம், ‘இது பஞ்சாயத்து தீர்ப்பு, நாங்க அவங்கள தொடக்கூடாது’ என சலூன் கடைக்காரர் பதிலளித்துள்ளது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் கடைக்காரரின் கருத்துக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.