உலகத் தமிழர்களின் பெருமைக்குரிய திருவள்ளுவர் கலாசார மையம், சிங்கப்பூரில் அமைக்கப்பட உள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி. இந்த முன்முயற்சி, திருவள்ளுவரின் உலகளாவிய தாக்கத்தை எடுத்துரைப்பதுடன், தமிழ் கலாச்சாரத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் ஒரு முக்கியமான படியாகும்.

இந்த திட்டம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்-ஐ சந்தித்த பின்னர் அறிவிக்கப்பட்டது. இது, இரு நாடுகளுக்கு இடையிலான கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கியமான நிகழ்வாகும்.

பாஜகவின் தேர்தல் அறிக்கையில், உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாசார மையங்கள் அமைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. சிங்கப்பூரில் இந்த மையம் அமைக்கப்படுவது, இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் முதல் படியாகும். இந்த முயற்சி, தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை பாதுகாத்து வளர்ப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்ர்க்கபடுகிறது.