
உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வானியில், ஒரு நபர் தனது ஸ்கூட்டரை முழுமையாக மதுபான கடையாக மாற்றியிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சாலையில் கலால் துறையினர் நடத்திய திடீர் சோதனையில், அந்த ஸ்கூட்டரில் இருந்து 50 குவாட்டர் மதுபான பாட்டில்கள் மற்றும் 5 அரை பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது. வீடியோவில், அதிகாரிகள் அந்த ஸ்கூட்டரிலிருந்து பாட்டில்களை எடுத்து வரிசையாக வைக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த வீடியோ வைரலானதையடுத்து, நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் “பார்ட்டி ஆன் வீல்ஸ்” என வேடிக்கையாக கமெண்ட் செய்து வருகின்றனர். மது பாட்டில்களை ஸ்கூட்டியின் முன்பக்கத்திலும், சீட்டுக்கு அடியிலும் அவர் மறைத்து வைத்திருந்தார். இந்த புதிய முறையைப் பார்த்த அதிகாரிகள் கூட அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
हल्द्वानी में एक जांबाज युवक ने अपनी स्कूटी को मिनी-बार बना डाला! 50 शराब के क्वार्टर और 5 आधी बोतलें छिपाकर शहर में “पार्टी ऑन व्हील्स” की प्लानिंग थी लेकिन उससे पहले “मोबाइल दारू दुकान” का भंडाफोड़ हो गया। स्कूटी और शराब को जब्त कर, इस “शराबी सुपरमैन” को आबकारी विभाग के हवाले… pic.twitter.com/XnlWpjRTp3
— bhUpi Panwar (@askbhupi) May 24, 2025
இது போன்ற சட்டவிரோத செயல்களுக்கு எதிராக காவல்துறையும் கலால் துறையும் தொடர்ந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் @askbhupi என்ற பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதுவரை 42,000-க்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவைப் பார்த்துள்ளனர். மேலும் நகைச்சுவையுடன் சிலர் “இது நகரும் மதுக்கடை” எனக் குறிப்பிட்டுள்ள நிலையில், மற்றொருவர் “அதிகாரி அந்த சின்ன வணிகத்தை கெடுத்து விட்டார்” என கருத்து பதிவிட்டுள்ளனர்.