உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளை பரிமாறிக் கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக அந்த நாளை கொண்டாடுவார்கள். காதலர்கள் மட்டுமின்றி கணவன் மனைவி ஆகியோரும் காதலர் தினத்தில் தங்களுடைய அன்பை வெளிப்படுத்துவார்கள். உலகம் முழுவதும் காதலர் தினம் காதலர்களால் கொண்டாடப்படும் நிலையில் காதலின் அடையாளமாக இதய சின்னத்தை வெளிப்படுத்துவார்கள்.

இந்நிலையில் நாளை காதலர் தினம் என்பதால் அதனை முன்னிட்டு ஒரு மனைவி தன்னுடைய கணவருக்கு சப்பாத்தி சுட்டுக்கொடுத்தார். அந்த சப்பாத்தியை அவர் இதய வடிவில் செய்தார். அதாவது சப்பாத்தியை வழக்கம்போல் சுட்டுவிட்டு ஒரு சிறிய இதயத்தை அதன் நடுவில் சுட்டு வைத்தார். மேலும் இந்த வீடியோவை காதலர் தின சப்பாத்தி என்று பதிவிட்டு சமூக வலைதளத்தில் வெளியிட அது தற்போது வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Yashwant Jain (@yashvant1123)