பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் பகுதியில் பிரகாஷ் மண்டல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு கடித்த நிலையில் அந்த பாம்பின் வாயை பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு இந்த பாம்பு தான் என்னை கடித்தது என்று கூறிக்கொண்டு சிகிச்சைக்காக சென்றார். அவர் மருத்துவமனைக்கு பாம்புடன் சென்றது அங்கிருந்தவர்களை பயத்திற்குள்ளாக்கியது. சிறிது நேரம் அந்த நபர் வலி தாங்க முடியாமல் மருத்துவமனை வளாகத்தில் பாம்பை பிடித்தவாரே படுத்துக் கொண்டார்.

அந்த நபர் கையில் பாம்பை வைத்திருந்ததால் எப்படி சிகிச்சை வழங்க முடியும் என்று மருத்துவர்களும் செவிலியர்களும் திகைத்துப் போய் நின்றனர். பின்னர் அங்கிருந்த ஒருவர் அவர் கையைப் பிடித்தவாறு மருத்துவமனைக்கு வெளியே அழைத்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து பிரகாஷ் ‌ தனக்கு சிகிச்சை அளிக்கப்படாததை உணர்ந்த  பின்னர் அந்த பாம்பை விடுவித்தார். மேலும் அதன் பிறகு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டதா இல்லையா என்ற விவரங்கள் தெரியவில்லை. இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.