இன்றைய காலகட்டத்தில் விவாகரத்துக்கள் என்பது சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. கணவன் மனைவிகள் சில சிறிய பிரச்சனைக்காக கூட சில சமயங்களில் விவாகரத்து வரை சென்று விடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. அதாவது ஒரு கணவன் மனைவி கிட்டத்தட்ட 25 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்த நிலையில் தற்போது திடீரென மனைவி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார். இது தொடர்பாக அவர் ரெட்டிட் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது தன் கணவர் அடுக்கடுக்காக ஏராளமான கேள்விகளை கேட்பதாக அவர் கூறியுள்ளார்.

எடுத்துக்காட்டாக வழக்கமாக பயன்படுத்தும் சோப்புக்கு பதிலாக வேறொரு சோப்பை மாற்றினால் கூட ஏன் இந்த சோப்பை மாற்றினாய். எதற்காக இதனை பயன்படுத்துகிறாய். இத்தனை சோப்புகள் இருக்கும்போது எதற்காக இந்த சோப்பை மட்டும் பயன்படுத்துகிறாய். இதனை தேர்ந்தெடுப்பதற்கான காரணம் என்ன என்று கேட்கிறார். இப்படிப்பட்ட கேள்விகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் அதனால் நான் என் கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளேன் என்று பதிவிட்ட நிலையில் தற்போது அது இணையதளத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.