பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகைகள் ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் தற்போது பிரபல சீரியல் நடிகை ரச்சிதா இந்தியன் 2 படத்தை பங்கமாக கலாய்த்துள்ளார். அதாவது இந்தியன் 2 படத்தை பார்த்தபோது தான் மிகவும் ஏமாற்றம் அடைந்ததாக கூறியுள்ளார். மேலும் அதற்கு பதிலாக இந்தியன் படத்தை ரீ ரிலீஸ் செய்திருக்கலாம் என்றும் விமர்சித்துள்ளார்.