இந்தியாவிலுள்ள தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) முக்கிய தேவையான மருந்துகளின் விலையை ஏப்ரல் 1 முதல் 1.74% வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் தொற்றுநோய்கள், இதய நோய்கள் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் அடங்கும். மருந்துகள் (விலை கட்டுப்பாட்டு) உத்தரவு, 2013 (DPCO, 2013) அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் மொத்த விலை குறியீட்டின் (WPI) அடிப்படையில் திட்டமிட்ட மருந்துகளின் உச்ச விலை திருத்தப்படுகிறது.

2024-25 நிதியாண்டுக்கான திட்டமிட்ட மருந்துகளின் உச்ச விலை, இன்று முதல், வருடாந்திர WPI மாற்றத்தின் அடிப்படையில் 0.00551% உயர்த்தப்பட்டுள்ளது. புதிய மருந்துகளின் சில்லறை விலையையும் NPPA நிர்ணயிக்கிறது. இந்த விலை திருத்தம் தேசிய அவசிய மருந்துகளின் பட்டியலில் (NLEM) உள்ள மருந்துகளுக்கே பொருந்தும்.

விலை உயர்த்தப்பட்ட மருந்துகளின் விவரம்:

அசித்ரோமைசின் (Azithromycin):

250mg – ₹11.87 / மாத்திரை

500mg – ₹23.98 / மாத்திரை

அமோக்சிலின் மற்றும் கிளவுலானிக் ஆசிட் (Dry Syrup): ₹2.09 / மில்லி

டைக்ளோஃபெனாக் (Diclofenac) – வலி நிவாரணி: ₹2.09 / மாத்திரை

ஐபுபுரோஃபென் (Ibuprofen):

200mg – ₹0.72 / மாத்திரை

400mg – ₹1.22 / மாத்திரை

நீரிழிவு மருந்து (Dapagliflozin + Metformin Hydrochloride + Glimepiride): ₹12.74 / மாத்திரை

அசைக்க்ளோவிர் (Acyclovir) – வைரஸ் எதிர்ப்பு மருந்து:

200mg – ₹7.74 / மாத்திரை

400mg – ₹13.90 / மாத்திரை

ஹைட்ரோக்ஸிக்க்ளோரோக்வின் (Hydroxychloroquine) – மலேரியா எதிர்ப்பு மருந்து:

200mg – ₹6.47 / மாத்திரை

400mg – ₹14.04 / மாத்திரை