விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் 2011 இல் அதிமுக கூட்டணி, 2016 இல் திமுக, 2019 இல் இடைத்தேர்தல் அதிமுக, 2021 இல் திமுக என மாறிமாறி வெற்றிபெற்று வந்தன. சராசரியாக அதிமுகவுக்கு 75,000க்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன. இருப்பினும் அதிமுக போட்டியிட மறுத்தது ஏன் என்று தற்போது இந்த தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட இபிஎஸ் முடிவு செய்திருந்ததாகவும், செலவை முன்னாள் அமைச்சர் ஒருவரை கவனித்து கொள்ள கேட்டதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் பெரும்தொகையை தன்னால் செலவிட முடியாது, அப்படி செலவிட்டாலும் வெற்றி கிடைக்குமா என உறுதியாக தெரியாது என்பதால் மறுத்து விட்டதாலும், சீனியர்களின் அழுத்தத்தினாலுமே புறக்கணித்ததாகத் தெரிகிறது.