
ஈரோடு இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற்ற நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இந்நிலையில் இடைத்தேர்தலில் அதிமுகவின் படுதோல்வி குறித்து தற்போது ஓபிஎஸ் காரசார அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த தோல்வி அதிமுக வலுவிழந்த இருப்பதை காட்டுகிறது. கட்சிக்காக உழைத்தவர்களை உதறி தள்ளியதே தோல்விக்கு காரணம். இந்த தோல்வி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. கட்சியை அழிவு பாதைக்கு அழைத்துச் சென்ற நம்பிக்கை துரோகிக்கு கண்டனம் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.