
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஈத் பானு (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அங்கு இடது சிறுநீரகத்தில் பிரச்சனை இருப்பதால் அதை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன்படி அவருக்கு அறுவை சிகிச்சையும் நடைபெற்றது. இருப்பினும் தொடர்ந்து பானுவின் உடல்நிலையில் மாற்றமின்றி தொடர்ந்து மோசமானது.
இதனால் அவர்கள் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு பானுவின் உறவினர்களிடம் கூறுயுள்ளனர். இந்நிலையில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது இடது சிறுநீரகத்துக்கு பதில் வலது சிறுநீரகத்தை மருத்துவர்கள் தவறாக அகற்றியது தெரியவந்தது. அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் ஏற்கனவே ஒரு கிட்னி செயலிழந்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நன்றாக செயல்பட்டு வந்த கிட்னியையும் மருத்துவர்கள் எடுத்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.