இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி குஜராத் ராஜ்கோட் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 171 ரன்கள் எடுத்தது இதனைத் தொடர்ந்து 172 ரன்களை இலக்காக வைத்து இந்திய அணி பேட்டிங் செய்தது. ஆனால் இங்கிலாந்து அணியின் அபாரமான பந்துவீச்சால் இந்திய அணி 145 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தது.

இதனால் இங்கிலாந்து அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. தோல்விக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறுகையில், “இங்கிலாந்த அணி எட்டு விக்கெட் இழந்து 127 ரன்னில் இருந்த போது வாய்ப்பை பயன்படுத்த தவறி விட்டோம்.

இங்கிலாந்தை சேர்ந்த ஆதில் ரஷீத் நாங்கள் ஸ்டிரைக் ரொட்டேட் செய்யாதபடி அருமையாக பந்து வீசினார். அதன் காரணமாகவே அவர் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளராக பாராட்டப்படுகிறார்” எனக் கூறியுள்ளார்.