
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து விட்ட நிலையில் வெவ்வேறு விதமாக ஒவ்வொரு நாளும் புதுசு புதுசாக யோசித்து மக்களை ஏமாற்றுகிறார்கள். செல்போனில் குறுஞ்செய்தி அனுப்புவது லிங்க் அனுப்புவது போன்றவைகள் மாறி தற்போது போன் மூலம் தொடர்பு கொண்டு வீடியோ காலில் நிர்வாணமாக வந்து மிரட்டுதல், வங்கியிலிருந்து பேசுகிறோம் என்று கூறி பணம் பறித்தல், டிஜிட்டல் அரஸ்ட் போன்றெல்லாம் பல்வேறு விதமாக மோசடிகள் நடக்கிறது. அதுமட்டுமின்றி பிரபல ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்களில் இருந்து பரிசு கூப்பன் போன்றவைகளை அனுப்பியும் மோசடி செய்கிறார்கள். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் தற்போது மோசடி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி ஒரு வீடியோ போட்டுள்ளார்.
அதாவது மீசோவில் இருந்து பரிசு கூப்பன் அனுப்புவது போன்று அந்த பெண்ணுக்கு ஒரு தபால் வந்தது. அதில் 20 லட்ச ரூபாய் பரிசு விழுந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பார்த்து முதலில் அந்த பெண் ஆச்சரியப்படுவது போன்று இருந்த நிலையில் பின்னர் முகவரியை சோதித்துப் பார்த்தபோது தான் அது பொய் என்று தெரிய வந்தது. ஏற்கனவே இது போன்று ஒருமுறை பரிசு கூப்பன் வந்ததாக அந்த பெண் கூறுகிறார். இந்த வீடியோ மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இருக்கும் நிலையில் வீடியோவை வெளியிட்ட பெண்ணை கோவை போலீசார் காமெண்ட் மூலம் பாராட்டியுள்ளனர். மேலும் அதற்கு அந்த பெண் நன்றியும் தெரிவிக்கிறார். இதோ அந்த வீடியோ,
View this post on Instagram