அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், 8 நாள் மட்டுமே இருக்க வேண்டிய நிலையில் எதிர்பாராத விதமாக அவர்களின் விண்வெளிப் பயணம் 9* மாதங்களாக நீண்டு, கடைசியாக பூமிக்குத் திரும்பியுள்ளனர். நாசாவின் நிக் ஹேக் மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் இணைந்து, அவர்கள் Crew-9 குழுவில் பயணித்தனர்.

எலான் மஸ்கின் ஸ்பேஸ்‌எக்ஸ் டிராகன் விண்கலம், அவர்களை பூமிக்கு திரும்பி, புளோரிடா கடற்கரையில் நீரில் தரையிறக்கியது. இந்த மீட்புப் பணியின் போது, டிராகன் கேப்சூல் சுற்றி டால்பின்கள் நீந்திக்கொண்டிருந்த காட்சி சமூக ஊடகங்களில் பெரும் பரவலாகப் பகிரப்பட்டது. மீட்பு குழு கேப்சூலை நீரில் இருந்து மேலே தூக்கி, நீண்ட நாட்களுக்குப் பிறகு அதன் சைடு ஹேட்சை திறந்தனர்.

“>

 

பின்னர், விண்வெளி வீரர்கள் கேப்சூலிலிருந்து வெளியேறி, ஹூஸ்டன் நகருக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்களுக்கு 45 நாட்கள் மறுவாழ்வு (rehabilitation) பயிற்சி வழங்கப்படும்.