ஆஸ்கர் விருது வென்ற பிரபல ஜப்பானிய இசை அமைப்பாளர் ரியூச்சி சகமோட்டோ காலமானார். இவருக்கு வயது 71. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் புற்றுநோயால் போராடி வந்த இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 1987 ஆம் ஆண்டு வெளியான டி லாஸ்ட் எம்பிரர் படம் அவருக்கு சிறந்த இசை அமைப்பாளருக்கான ஆஸ்கர், கோல்டன் குளோஸ் மற்றும் கிராமி ஆகிய விருதுகளை பெற்றுத் தந்தது.