
ஆவின் பால் பாக்கெட்டுகளில் மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆவின் நிர்வாகம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதன்படி, பால் பாக்கெட்டுகளில், முதலமைச்சர் முக ஸ்டாலின் புகைப்படத்தை அச்சிட்டு, “மழைநீர் சேகரிக்க ஆரம்பிக்கலாங்களா?” என்ற வாசகங்களும் இடம்பெறும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இதற்கு பொதுமக்கள் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆவின் பாக்கெட்டுகளில் கிரீன் மேஜிக், நைஸ், ப்ரீமியம் என ஆங்கிலத்தில் அச்சிட்டு விற்பதற்கும், தமிழை பாதுகாக்கும் லட்சணம் இதுதானா எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.