தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தில் இருந்து சரியாக நாள் ஒன்றுக்கு 35 லட்சம் லிட்டர் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது அனைத்தும் அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிமையான முறையில் கிடைக்கும் விதமாக ஆவி நிறுவனம் சில்லறை விற்பனை நிலையங்களை அமைத்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் ஆவின் நிர்வாகம் சென்னை உட்பட்ட பகுதியில் புதிய ஆவின் பாலகத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.

எனவே ஆவின் பாலகம் அமைத்து விற்பனை செய்ய விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் பாலகம் அமைப்பதற்கு வடிவமைப்புக்கு ஏற்ப சுமார் 1.5 லட்சம் முதல் 6 லட்சம் வரை முதலீடு தேவைப்படும். மேலும் ஆவின் நிறுவனத்திற்கு 30 ஆயிரம் மதிப்பு தொகையாக செலுத்த வேண்டும். கொள்முதல் செய்வதற்கு பிறகு மாதம் தோறும் சுமார் 10 லட்சம் வரை விற்பனை செய்ய வாய்ப்பு உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.