ஆவின் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மார்க்கெட்டிங் கன்சல்டன்ட், லாஜிஸ்டிக் கன்சல்டன்ட், பைனான்சியல் மேனேஜ்மென்ட் அனாலிஸ்ட், அப்ளிகேஷன் டெவெலப்பர் ஆகிய பதவிகள் காலியாக உள்ளதாகவும் மாதம் ஒரு லட்சம் முதல் 2.50 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஐந்து முதல் பத்து ஆண்டுகள் முன் அனுபவம் அவசியம். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஓராண்டு பதவியில் அமர்த்தப்படுவர். https://aavin.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து “managing director, the Tamilnadu cooperative milk producer federation limited, 3A pasumpon muthuramalinganar Salai, aavin illam, nandanam, Chennai 600035 என்ற முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது