தமிழகத்தில் பதிவிற்காக தாக்கல் செய்யப்படும் ஆவணங்களில் உள்ள சிறு பிழைகளுக்காக ஆவணத்தாளர்களை அலைக்கழிக்க கூடாது என பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆவணக்காரர்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் பதிவு அலுவலகங்களில் தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் தொடர்பான தகவல்களை உரியவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் உடனுக்குடன் சரி செய்யத்தக்க பிழைகளுக்காக ஆவணதாரர்களை அலைக்கழிக்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.