கேரளாவின் ஆலப்புழா அருகே காயங்குளத்தில் பாஜக பிரமுகர் அவரது மனைவியும் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டனர். காயங்குளம் பாஜக மண்டல பிரிவு செயலாளர் பி கே.சாஜி(48), அவரது மனைவி பினு (42) ஆகியோர் உயிரிழந்தனர். முதல் கட்ட தகவலின் படி ஷஜி தனது மனைவியை கொன்று விட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

இருவருக்கும் குடும்ப பிரச்சனை இருந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர். கோவையில் படித்து வரும் இவர்களது மகன் அவர்களை தொடர்பு கொண்ட போது போனை எடுக்காததால் இவர்கள் இறந்தது தெரிய வந்தது. தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.