
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று பெரியாரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் தன்னுடைய கொள்கைகளை வெளிப்படுத்துவது போன்று விஜய் கருத்துக்கள் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் சென்னை பெரியார் திடலில் உள்ள நினைவிடத்திற்கு இன்று நடிகர் விஜய் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட கட்சியினர் நேரில் சென்றனர். அங்கு பெரியார் சிலைக்கு நடிகர் விஜய் மலர் தூவி வாழ்த்துக்களை தெரிவித்தார். நடிகர் விஜய் திடீரென்று வந்த நிலையில் அவர் வந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் உடனடியாக அங்கு குவிந்தனர்.
அவர்கள் விஜயுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ள நிலையில் அவர் பெரியாரின் கொள்கைகளை அரசியல் களத்தில் பின்பற்றுவார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். மேலும் அவருடைய அறிக்கையிலும் பெரியாரைப் புகழ்ந்து பதிவிட்டிருந்த வாழ்த்து செய்தி அவர் கட்சியின் கொள்கைகளை வெளிப்படுத்துவது போன்று தான் இருந்தது. இதன் காரணமாக தமிழக அரசியல் வட்டாரத்தில் விஜயின் செயல் பேசும் பொருளாக மாறி உள்ளது.