
திருச்சியில் இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும். அதன் பிறகு செந்தில் பாலாஜியை பார்த்து நாங்கள் பயப்பட அவர் என்ன ஆரிய படை தலைவரா.? திமுகவினர் பணம் கொடுத்தால் மட்டும்தான் வேலை செய்கிறார்கள். ஆயிரம் தான் இருந்தாலும் விஜய் என்னுடைய தம்பி. அவர் எனக்கு எதிரி கிடையாது. எனக்கு எதிரி திமுக மட்டும் தான். திமுகவினர் என்னை பாஜகவின் பிடீம் என்று கூறும் நிலையில் அப்போ ஏடீஎம் யார். உண்மையில் பாஜகவின் ஏடீம் திமுக தான்.
அதனால்தான் அவர்கள் என்னை பீடீம் என்று கூறுகிறார்கள் என்றார். மேலும் முன்னதாக நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய போது அவரை தம்பி என்று கூறி ஆதரவு கொடுத்த சீமான் அவருடைய கட்சி கொள்கைகளை கூறிய பிறகு அழகிய கூமுட்டை மற்றும் லாரியில் அடிபட்டு செத்துவிடுவார் போன்ற வார்த்தைகளால் விமர்சித்தார். அதன் பிறகும் விஜயை அவர் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில் சீமானின் பிறந்தநாளுக்கு விஜய் அண்ணன் என்று கூறி வாழ்த்து கூறினார். மேலும் இந்த நிலையில் தற்போது விஜய் தன்னுடைய எதிரி கிடையாது என்றும் அவர் தன்னுடைய தம்பி தான் என்றும் சீமான் கூறியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.