
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை, பெரம்பூரில் அவரது வீட்டின் அருகே நின்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரி தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளது. இதனால் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங்க் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் முதல் கட்டமாக 8 பேர் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைக்கு பிறகு கொலைகாண காரணம் என்ன என்பது குறித்து தெரியவரும் என்று சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார். ஆமாங்கை வெட்டி கொலை செய்துவிட்டு குற்றவாளிகள் தப்பியோடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது கொலை குறித்த கட்சியின் தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.