
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது என எதிர்கட்சிகள் திமுக அரசு மீது சரமாரி குற்றசாட்டுகளை முன்வைத்தது.
அதோடு தொடர்ந்து சென்னையில் கொலை மற்றும் போதைப்பொருள் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தற்போது சென்னை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி அவர் காவல்துறை பயிற்சி கல்லூரி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குனராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.