மும்பையை சேர்ந்த டார்க் நைட் என்ற எக்ஸ் பையனர் சமீபத்தில் ஓலா கேப் மூலமாக பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது தனக்கு நேர்ந்த அனுபவம் பற்றி அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது கேப் ஓட்டுநர் பயணத்தின் போது ஆம்லெட் செய்வது எப்படி என்று வீடியோ பார்த்தபடி காரை ஓட்டியுள்ளார்.

இதனை டார்க் நைட் எக்ஸ் வலைதள பக்கத்தில் குறிப்பிட்டு “அன்புள்ள ஓலா, எங்கள் உயிரைப் பணயம் வைத்து வாகனம் ஓட்டும் போது உங்கள் ஓட்டுநர் ஆம்லெட் எப்படி சமைக்க வேண்டும் என்று கற்றுக்கொள்கிறார். உங்கள் ஸ்கூட்டர்கள் ஏற்கனவே தீப்பிடித்து எரிந்துள்ளன.

இதுவும் தீப்பிடித்து எரிந்து சாம்பலாக மாறுவதற்கு முன்பு நீங்கள் சரியான நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த மும்பை காவல் துறையினர் சரியான இடத்தை கூறுமாறு கேட்டுள்ளனர்.

https://x.com/MumbaiPolice/status/1871435222736355413