ஆந்திராவில் உள்ள சுதம்பேட்டை பகுதியில் அப்பாராவ் என்ற 85 வயது முதியவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் வயது முதிர்வு காரணமாகவும் உடல் நலக்குறைவின் காரணமாகவும் அவதிப்பட்டு வந்தார். இவரை அவருடைய உறவினர்கள் ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். ஆனால் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் முதியவரை வீட்டிற்கு கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் கூறிவிட்டனர். அதன்படி உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக முதியவரை வீட்டிற்கு கொண்டு வந்த நிலையில் உடலில் வரும் வழியில் அசைவு இல்லை.

இதன் காரணமாக இறந்துவிட்டதாக நினைத்து உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவருடைய உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத நிலையில் இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அவருடைய உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்வதற்காக பாடையில் ஏற்றினர். அப்போது அவருடைய கை கால்களில் திடீரென அசைவு ஏற்பட்டது. அவர் திடீரென பாடையில் எழுந்து உட்கார்ந்தார். அதைப் பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதே சமயத்தில் அவர் உயிரோடு இருந்தது உறவினர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.