வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழக பதிவெண்ணிற்கு மாற்றாமல் இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு பலமுறை எச்சரித்திருந்தது. ஆனாலும் விதிகளை மீறி பலரும் வாகனங்களை இயக்கி வருகிறார்கள். தற்போது அந்த வாகனங்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் சிறைப்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளை பதிவு செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் , ஐந்து மாதங்களுக்கு முன்பே ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் இது குறித்து தெரிவித்துவிட்டதாகவும் இரண்டு முறை தமிழகத்தில் பதிவு செய்யும் நடைமுறையை தாமதப்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தியதாகவும் கூறியுள்ளார்