
கடந்த மே 7 ஆம் தேதி அதிகாலை இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில், பாகிஸ்தானும் பாக் கைப்பற்றிய காஷ்மீரும் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இது, ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையாக நடைபெற்றது. இந்த அதிரடி தாக்குதலில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதில், பாகிஸ்தான் இராணுவத்துடன் நேரடி தொடர்பு கொண்ட 5 முக்கிய தலைமை பயங்கரவாதிகளும் அடங்கினர்.
தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்ட முக்கிய பயங்கரவாதிகள்:
1. முதசார் (Mudassar Khadian Khas alias Abu Jundal) – லஷ்கர் இ தொய்பா
முரீட்கேவில் உள்ள மார்க்கஸ் தாய்பாவின் பொறுப்பாளி. அவரது இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் இராணுவம் கௌரவ அணிவகுப்பு வழங்கியது. பாக் இராணுவத் தளபதி மற்றும் பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ் சார்பில் மாலைகள் வைக்கப்பட்டன. உலகத் தளத்தில் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட ஹபீஸ் அப்துல் ரவூஃப் தொழுகை நடத்தினார். பாக் ராணுவ லெப்டினன்ட் ஜெனரலும், பஞ்சாப் ஐ.ஜியும் பங்கேற்றனர்.
2. ஹபீஸ் முஹம்மது ஜமீல் – ஜெய்ஷ் இ முகமது
ஜெய்ஷ் தலைவர் மசூத் அசாரின் மாமனார். பஹாவல்பூரில் உள்ள மார்க்கஸ் சுபான் அல்லாவின் பொறுப்பாளர். இளைஞர்களை தீவிரவாத பாதையில் இயக்கவும், நிதி திரட்டவும் முக்கிய பங்காற்றினார்.
3. மொஹம்மது யூசுப் அசார் alias உஸ்தாத் ஜி alias கோசி சாஹப் – ஜெய்ஷ்
மசூத் அசாரின் மாமனார். ஜெய்ஷ் அமைப்புக்கான ஆயுதப் பயிற்சிப் பிரிவை மேற்பார்வை செய்தவர். ஜம்மு-காஷ்மீரில் பல தாக்குதல்களில் ஈடுபட்டவர். IC-814 விமான கடத்தல் வழக்கில் தேடப்படும் பயங்கரவாதி.
4. காலித் alias அபூ அகாஷா – லஷ்கர் இ தொய்பா
ஆப்கானிஸ்தானில் இருந்து ஆயுதங்களை கடத்தி வந்தவர். பைசலாபாத்தில் நடைபெற்ற அவரது இறுதிச் சடங்கில், பாக் இராணுவம் மற்றும் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றனர்.
5. மொஹம்மது ஹசன் கான் – ஜெய்ஷ் இ முகமது
ஜெய்ஷ் அமைப்பின் பாக்-அக்குபைட் காஷ்மீரில் செயல்படும் தளபதி அஸ்கர் காஷ்மீரியின் மகன். ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களில் திட்டமிடல் மற்றும் இணைப்புப் பணிகளை மேற்கொண்டவர்.
இந்த 5 பயங்கரவாதிகளும் பாகிஸ்தான் இராணுவத்தால் கௌரவிக்கப்பட்ட விதம், பாக் அரசு தீவிரவாத அமைப்புகளை நிழல் ஆதரவாக அல்ல, நேரடியாக பாதுகாத்து வளர்த்து வருவதை உலகிற்கு வெளிச்சமிட்டுள்ளது. இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் மூலம், தீவிரவாதத்துக்கான பாக் ஆதரவு முகங்கள் உடைந்துள்ளன என்பது உறுதி செய்யப்படுகிறது. இந்த நடவடிக்கை இன்னும் பல பயங்கரவாத தலைமை முகாம்களை அழிக்கும் நோக்கில் தொடரும் என கூறப்படுகிறது