பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி என இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூரா பாகிஸ்தானை பல்வேறு விமானப்படை தளங்களில் கடுமையாக தாக்கியது. இந்த தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பாகிஸ்தான், தற்போது அந்த சிக்கல்களை மறைக்கும் முயற்சியாக “வெற்றிப் பேரணி” என்ற பெயரில் கராச்சியில் ஒருபெரிய நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

இதில் பங்கேற்ற முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தானின் முன்னாள் அணித் தலைவருமான ஷாஹித் அப்ரிடி, தனது உரையின் மூலம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். பாகிஸ்தான் ஆயுதப்படைகளை பாராட்டும் வகையில், அவர் கூறியதாவது: “இந்த வெற்றி, போரின் மகிழ்ச்சி அல்ல, பாகிஸ்தான் மக்கள் ராணுவத்துடன் தோளோடு தோள் நின்று இருப்பதை உலகுக்கு தெரிவிக்கும் அமைதியான ஒற்றுமைப் பேரணி.”

மேலும், இந்தியா தன் செயலில் தோல்வியடைந்துள்ளதாகவும், இந்தியாவின் “ஆக்ரோஷ கொள்கைகள் பின்வாங்கியுள்ளன” என்றும் கூறினார். “இந்தியாவை எதிர்த்துப் பேசுவது அல்லாஹ்விற்கு நன்றி கூறுவது,” என்றும் அவர் கூறி, பாகிஸ்தான் மக்களுக்கு இந்தியா மீதான வெறுப்பை தூண்டும் வகையில் உரையாற்றினார்.

அதையடுத்து, இந்திய ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்புகின்றன என்றும், “போர் வெறியில் இருக்கும் மோடி இந்தியாவை உலகளவில் தனிமைப்படுத்தி விட்டார்” என கடுமையாக விமர்சித்தார்.

மேலும், இந்திய ராணுவம் பொதுமக்கள் மற்றும் மத இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது எனக் கூறிய அவர், பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடாகவே இருந்து வருகிறது என்றும், அதற்கும் இந்தியாவிற்கும் உள்ள மாறுபாடு உலகிற்கு தெரியும் என்றும் தெரிவித்துள்ளார். அவரது